மனைவி பிரிந்த சோகம்… வீடியோ வெளியிட்டு கணவர் தற்கொலை!

வேலூரில் திருமணமான 2 மாதத்தில் மனைவி தன்னைவிட்டு பிரிந்து சென்றதால் கணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வேலூர் அடுத்த கீழ்மொணவூர் அம்மன் நகரைச் சேர்ந்த அஜய்குமார், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்த அர்ச்சனா ஆகிய இருவரும் கடந்த மே 8ஆம் தேதி, வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்துகொண்டனர். அதையடுத்து, கீழ்மொணவூரில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கினர். இந்நிலையில் திருமணம் ஆன மூன்றாவது நாளே மனைவியின் நடத்தையில் அஜய்குமாருக்கு சந்தேகம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்துள்ளது. மேலும் சமீபத்தில் அர்ச்சனாவுக்கு கர்ப்பப்பை அறுவை சிகிச்சை நடந்திருக்கிறது. இதனால், அர்ச்சனா தாய் வீட்டில் ஓய்வெடுக்கச் செல்வதாக சென்றுவிட்டார். தனது மனைவியை வீட்டிற்கு வருமாறு அஜய்குமார் சென்று அழைத்துள்ளார்.

ஆனால் அர்ச்சனா வரமறுத்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சல் அடைந்த அஜய்குமார் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். தற்கொலைக்கு முன்பு வீடியோ பதிவு செய்த அவர் உறவினர்களுக்கு வாட்ஸ் அப் மூலம் அதனை அனுப்பியுள்ளார். அஜய்குமாரின் வீடியோவைக் கண்ட உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்து பார்ப்பதற்குள் அஜய்குமார் தன்னுடைய உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக விரிஞ்சிபுரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply