அதிமுக பெண் கவுன்சிலர் திடீர் மரணம்.!! அதிர்ச்சியில் தொண்டர்கள்!!

அதிமுக பெண் கவுன்சிலர் ரம்யா சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலமானார். அவருக்கு வயது 45.உடுமலை காந்திகர் பகுதியை சேர்ந்தவர் கவுன்சிலர் ரம்யா. அதிமுகவை சேர்ந்த இவர் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் உடுமலை 7-வது வார்டில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த நிலையில், கடந்த சில நாட்களாக நோய்வாய்பட்ட ரம்யா கோவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல்நிலை மிகவும் மோசமாகவே சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த உடுமலை, திருப்பூர் மாவட்ட அதிமுகவினர், நகர்மன்ற உறுப்பினர்கள் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.அவரது உடல் இறுதிச்சடங்குக்காக பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை தேவிபட்டினம் கிராமத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply