பணம் எடுக்க பெட்டிக்குள் கைவிட்ட கூலித் தொழிலாளி : நல்லபாம்பு கடித்து உயிரிழந்த பரிதாபம் !!

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் கரம்பவிளை பகுதியைச் சேர்ந்த நடராஜன். இவர் கூலி வேலை செய்து வருகிறார்.

இவருக்கு இரண்டு ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகள் உள்ளது. இந்த நிலையில் இன்று குலசேகரன்பட்டினம் சாலையிலுள்ள ஹாலோ பிளாக் கம்பெனியில் நண்பர்களுடன் அமர்ந்து பேசிக் கொண்டிருந்துள்ளார். அப்போது நடராஜன் அங்குள்ள பெட்டிக்குள் கைவிட்டு பணம் எடுத்தபோது பெட்டிக்குள் உள்ளே இருந்த நல்ல பாம்பு நடராஜனின் வலது கையில் கடித்துள்ளது.

இதனையடுத்து அந்த பாம்பை நடராஜன் உடன் இருந்த நண்பர்கள் அடித்து, பாம்புடன் நடராஜனை திருச்செந்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. சிறிது நேரத்தில் சிகிச்சை பலனின்றி நடராஜன் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது தொடர்பாக திருச்செந்தூர் தாலுகா காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாம்பு கடித்ததில் கூலித்தொழிலாளி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply