அரிய வாய்ப்பு; ரயில்வே வேலை.. மொத்தம் 2,972 காலியிடங்கள்.! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசி தேதி.! முழு விவரம்.

இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் கிழக்கு மத்திய ரயில்வேயில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம்.

பணிக்கு மத்திய அல்லது மாநில அரசு பாடத்திட்டங்களின் கல்வி நிலையங்களில் 8-ம் வகுப்பு, அல்லது 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த Mechanic Diesel பணிக்கு மொத்தம் 2,972 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிப்போர் தேர்வு மற்றும் நேர்காணல் இல்லாமல் மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படவுள்ளனர். பொது விண்ணப்பதாரர்கள் ரூ.100 விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். SC/ ST/ PWD/ Women விண்ணப்பதாரர்களுக்கு கட்டணம் கிடையாது.

2972 பதவிகளுக்கான விண்ணப்ப செயல்முறை 11 ஏப்ரல் 2022 அன்று தொடங்கியது மற்றும் ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இரயில்வே அதிகாரப்பூர்வ வலைத்தளமான er.indianrailways.gov.in மூலம் 10 மே 2022 க்கு முன் விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க 15 வயது முதல் 24 வயது வரை உள்ளவராக இருக்க வேண்டும்.. இந்த பணியில் சேருவதற்கு முன் அனுபவம் எதுவும் தேவை இல்லை என குறிப்பிடப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் குறித்த விவரத்தை இணையத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம். விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ள நபர்கள் er.indianrailways.gov.in என்ற ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது விவரங்கள் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்துகொள்ளலாம்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply