பகீர்!! நடனம் ஆடிக் கொண்டே ஆசிரியரை தாக்க வந்த பள்ளி மாணவர்கள்!! தொடரும் அட்ராசிட்டி!!

தனியார் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த போது, அவரை நடனமாடியபடியே மாணவர்கள் தாக்க முயற்சித்த வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது.

இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பள்ளி மாணவர்களின் அநாகரீகப் போக்கு கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருகிறது. ஆசிரியர்களை தாக்குவது, கொச்சைவார்த்தைகளில் பேசுவது என அவர்களின் அராஜக வீடியோக்கள் வெளியாகி பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை கன்னியாகுமரி மாவட்டம், பள்ளியாடி பகுதியில் இயங்கி வரும் அரசு உதவி பெறும் மேல்நிலை பள்ளியில் பயின்று வரும் மாணவர்கள், ஆட்டம் போட்டபடியே ஆசிரியரை தாக்க முயலும் வீடியோ வைரலாகி வருகிறது.

அதில், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியர் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், மாணவர் ஒருவர் எழுந்து நின்று நடனமாடுவது போன்றும், அதன்பின்னர் மேஜை மீது மாணவர் எழுந்து நின்று நடனமாடுவது போன்றும் அந்த காட்சி அமைந்துள்ளன. பின்னர் ஒரு மாணவர் மேஜையை தூக்கி ஆசிரியரை தாக்க முயற்சிப்பது போலவும் காட்சிகள் பதிவாகி உள்ளது.

இந்த வீடியோ மியூசிக் பின்னணியில் எடிட் செய்யப்பட்டு வலைதளங்களில் பரவ விட்டுள்ளனர். இதில் ஒரு மாணவனை ஆசிரியர் எச்சரிப்பது போலவும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த சில மாதங்களாக அரசு பள்ளிகளில் மாணவர்கள் செய்யும் அராஜகங்கள் வெளிவந்த நிலையில் அதைதொடர்ந்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது பெற்றோர்கள், பொது மக்கள், சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் ஆதங்கத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply