சார்ஜ் இல்லாமல் நின்ற இ-பைக் அன்னபூரணி அம்மா பெயரை பார்த்ததும் நிற்காமல் ஓடியது – புதிய சர்ச்சையில் பெண் சாமியார்

சாதாரண ராஜசேகரனாக பிறந்து திருவண்ணமலையில் ஆசிரமம் தொடங்கி 28 நாடுகளில் 800 கிளைகளை தொடங்கியவர் சாமியார் நித்தியானந்தா.
அதுமட்டுமா ஆசிரமம் தொடங்கி 20 ஆண்டுகளில் கைலாசா என்ற தனிநாட்டையும் உருவாக்கினார் திருவண்ணாமலை சாமியார் நித்தியானந்தா. தலைமறைவு குற்றவாளியான நித்தியானந்தா எதை பற்றியும் கவலை இல்லாமல் தினமும் ஆன்லைனில் வீடியோ பதிவிடுவது வழக்கம்.

இதே போன்று தற்போது அருள்வாக்கு அன்னபூரணி அன்பு பெண்சாமியாரும் தனி ஆசிரமம் தொடங்கி ,தனி தனி வீடியோக்களை பதிவிட்டு வருகின்றார். ஒவ்வொரு நாளும் தனி தனி டாப்பிக்கிள் ,தனி சோபாவில் ,பட்டுப்புடவை சகித்தமாக நித்தியானந்தா பாணியில் தனது வீடியோக்களை வெளியிட்டு வருகின்றார். ஆன்மீகம் என்பது தனிஆளாக ,தனி அறையில் கதவை சாத்திக்கொண்டு இருப்பது தியானம் இல்லை ஆன்மீகம் இல்லை என்று புதிய குண்டை போட்டுள்ளார். கோவிலுக்கு போவது ,பஜனை செய்வது போன்றவை ஆன்மீகமே இல்லை என்று தடாலடியாக பேசியுள்ளார் அன்னபூரணி.

பெண் சாமியார் அன்னபூரணி அரசுவின் ஆன்மீக வகுப்பில் பங்கேற்ற பிறகு எலக்ட்ரிக் ஸ்கூட்டர் ஒடியது. எல்லையில்லா ஆனந்தத்தை உணர்ந்தேன் என்று அவரது சீடர்கள் புலங்காகிதம் அடைகின்றர். இது போன்று சர்ச்சை வீடியோ வெளியிட்டே புதிய ஆசிரமம் கட்டிய அன்னபூரணி அரசு அம்மா தற்போது ஆன்மீகம் என்றால் என்ன, சன்யாசி என்றால் யார் என்று மீண்டும் சர்ச்சை வீடியோ பதிவுகளை வெளியிட்டுள்ளார்.

இது மட்டுமா இதை விட பிரமாதமா இன்னொன்னு இருக்கு என்பதை போல காவி ஆடையை உடுத்திக்கொண்டு ,கோவிலுக்கு செல்வது போன்றவை சன்னியாசம் இல்லை என்றும் தனது ஆன்மீக சத்சங்கத்தில் கூறியுள்ளார் அன்னபூரணி மூன்று மாதங்களாக ட்ரெண்டிங்கில் இல்லாமல் இருந்த அன்னபூரணி அரசு மீண்டும் புதிய வீடியோக்கள் மூலமாக களத்தில் இறங்கியுள்ளார்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply