தன்னை விட 28 வயது குறைவான அழகிய பெண்ணை மணக்கும் 66 வயது பிரபலம்! புகைப்படங்கள்

பிரபல கிரிக்கெட் வீரர் அருண்லால் தன்னை விட வயதில் மிக குறைவான பெண்ணை இரண்டாவது திருமணம் செய்கிறார்.

 

இந்திய அணிக்காக 16 டெஸ்ட் மற்றும் 13 ஒருநாள் போட்டிகளில் விளையாடியவர் அருண் லால்(66). தற்போதுமேற்குவங்க ரஞ்சி அணியின் பயிற்சியாளராக உள்ளார்.

இவர் தனது நீண்ட நாள் நண்பரான புல் புல் சாஹாவை மே 2 ஆம் தேதி திருமணம் செய்து கொள்ளவுள்ளார். கடந்த ஒரு மாதத்திற்கு முன் இவர்களது நிச்சயதார்த்தம் நடந்தது.

அருண் லால் முதல் முறை ரீனா என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடால் இருவரும் பரஸ்பர சம்மதத்துடன் விவாகரத்து செய்து கொண்டனர்.

இருப்பினும், ரீனாவின் உடல்நலக்குறைவு காரணமாக, அவரை அருண் லால் நீண்ட காலமாக கூடவே இருந்து கவனித்து வருகிறார். இந்த நிலையில், தனது முதல் மனைவி ரீனாவின் ஒப்புதலைபெற்று அருண்லால் இரண்டாவது திருமணம் செய்து கொள்கிறார்.

திருமணத்திற்குப் பிறகு, தம்பதிகள் நோய்வாய்ப்பட்ட ரீனாவை கவனித்துக்கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. புதிய திருமண தம்பதிகளின் திருமண வாழ்த்து அட்டைகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

அருண் லால் மணக்கவுள்ள புல் புல் வயது 38 என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply