இந்தியாவில் வறுமை அளவு குறைந்துள்ளதாக உலக வங்கி தகவல்.!

இந்தியாவில் 2011ஆம் ஆண்டு முதல் 2019 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் வறுமையின் அளவு 12.3 விழுக்காடு குறைந்துள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

 

கடந்த 2011 ஆம் ஆண்டு இந்தியாவில் 22.5 விழுக்காடாக இருந்த வறுமையின் அளவு, 2019 ஆம் ஆண்டு 10.2 விழுக்காடாக குறைந்துள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக நகர்ப்புறங்களை விட ஊரகப் பகுதிகளில் வறுமை அளவு அதகம் குறைந்துள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிறுகுறு விவசாயிகளின் வருமானம் 10 விழுக்காடு அளவிற்கு உயர்ந்துள்ளதாக உலக வங்கியின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டு பணநிதியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவில் கிட்டத்தட்ட வறுமை ஒழிக்கப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply