இ – சைக்கிள் வாங்கினால் சிறப்பு மானியம்.. பெட்ரோல் விலை ஏறும் காலத்தில் டெல்லி அரசு அதிரடி அறிவிப்பு

நாடு முழுவதும் எரிபொருள் விலை தொடர்ந்து உயர்ந்துவரும் நிலையில், டெல்லி அரசு இ வாகனம் வாங்கும் நபர்களுக்கு சிறப்பு மானிய தொகை வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

மின்சார சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக டெல்லி அரசு புதிய சலுகைகள் அறிவித்துள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டெல்லி போக்குவரத்துத்துறை அமைச்சர் கைலாஷ் கெலாட் வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நகரில் இ-சைக்கிள் வாங்கும் முதல் 10,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.5,500 மானியம் வழங்கப்படும். மேலும், முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு கூடுதலாக ரூ.2,000 மானியம் வழங்கப்படும்.

அத்துடன் வணிகப் பயன்பாட்டிற்கான பெரிய ரக கார்கோ இ-சைக்கிள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கும் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கார்கோ இ-சைக்கிள் வாங்கும் முதல் 5,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.15,000 மானியம் வழங்கப்படும்.

இ-கார்ட் வாகனங்களை வாங்கும் நிறுவனங்களுக்கும் ரூ.30,000 மானியம் வழங்கப்படும் என உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சலுகை உத்தரவானது டெல்லியில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே உண்டு என அமைச்சர் கெலாட் தெரிவித்துள்ளார்.

டெல்லி முழுவதும் மொத்தம் 45,900 இ-வாகனங்கள் உள்ளது எனவும் அதில் 36 சதவீதம் இரு சக்கர வாகனங்கள் எனவும் அவர் கூறினார். அத்துடன் மாநிலத்தில் பதிவு செய்யப்பட்ட மொத்த வாகனங்களில் 12 சதவீத வாகனங்கள் இ-வாகனங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. டெல்லியில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.105.41க்கும், ஒரு லிட்டர் டீசல், ரூ.96.67க்கும் விற்கப்படுகிறது. கட்டுக்கடங்காமல் எரிபொருள் விலை ஏறிவரும் சூழலில் பயணிகளை இ வாகனங்கள் பயன்பாட்டிற்கு ஊக்குவிக்கும் விதமாக டெல்லி அரசு இந்த முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply