பிரபல காமெடி நடிகர் திடீர் மரணம்.. சோகத்தில் உறைந்த ரசிகர்கள்..!!!!!

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகேயுள்ள அல்லிநாயக்கன் பாளையம் பகுதியில் தனசேகரன்(43) வசித்து வந்தார்.

இவர் பிரபல நகைச்சுவை நடிகர் ஆவர். இவர் குள்ளமாக இருந்தாலும் இவரது நகைச்சுவை பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. நகைச்சுவை நடிகர்களில் முக்கியமான இடத்தை பிடித்த இவர் வெங்காயம், ஐம்புலன் உள்ளிட்ட பெரும்பாலான படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துள்ளார். அதுமட்டுமல்லாமல் நடன கலைஞரான இவர் பல்வேறு நடன குழுக்களில் இணைந்து ஆடிவந்தார். அதிலும் குறிப்பாக கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்ச்சிகள், நாடக கச்சேரிகளில் பங்கேற்று தனது நகைச்சுவையால் மக்களை குஷிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன் தனசேகரன் திருச்செங்கோடு அருகில் கோழிக்கால்நத்தம் என்ற பகுதியில் உள்ளூர் திருவிழா நடன நிகழ்ச்சியில் கலந்துகொண்டு ஆடினார். அதன்பின் நேற்று முன்தினம் காலை சொந்த ஊர் திரும்பினார். அதனை தொடர்ந்து உணவு சாப்பிட்டுவிட்டு உறங்கிவர் எழுந்திருக்கவில்லை. இதை பார்த்த அதிர்ச்சியடைந்த உறவினர்கள் உடனே மருத்துவருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு விரைந்து சென்ற மருத்துவர், தனசேகரனை பரிசோதித்து பார்த்தபோது அவர் மாரடைப்பால் இறந்திருப்பது தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply