ரத்தம் தெறிக்க தெறிக்க ஒரு த்ரில்லர்… செல்வராகவன்- கீர்த்தி சுரேஷ் கூட்டணியின் ‘சாணிக் காயிதம்’ ரிலீஸ் தேதி அப்டேட்!

இயக்குனர் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சாணிக்காயிதம்’ படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அப்டேட் கிடைத்துள்ளது.

 

‘ராக்கி’ படத்தின் இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் ‘சாணிக் காயிதம்’ திரைப்படம் உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்க்ரீன் சீன் நிறுவனம் இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

23 வருடங்கள் தனது இயக்கத்தின் மூலம் ரசிகர்களைக் கவர்ந்த செல்வராகவன் இந்தப் படத்தின் மூலம் நடிகராகவும் அறிமுகமாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தில் செல்வராகவன் மற்றும் கீர்த்தி சுரேஷ் இருவரும் வழிப்பறிக் கொள்ளை செய்யும் திருடர்களாக நடித்துள்ளனராம். எனவே படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

ராக்கி படத்தைப் போலவே இந்தப் படத்திலும் ரத்தம் ரத்தம் தெறிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

சாணிக்காயிதம் திரைப்படம் தியேட்டர் வெளியீட்டைத் தவிர்த்து நேரடியாக ஓடிடி-யில் வெளியாக இருப்பதாக கடந்த சில வாரங்களாக தெரிவிக்கப்பட்டு வருகிறது. தற்போது படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் கிடைத்துள்ளது. வரும் ஏப்ரல் 7-ம் தேதி முதல் சாணிக் காயிதம் படம் அமேசான் ப்ரைம் தளத்தில் வெளியாக இருப்பதாக கோலிவுட் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply