மீண்டும் ஐபிஎல்க்கு வரும் சுரேஷ் ரெய்னா.. உற்சாகத்தில் ரசிகர்கள்.!

15வது சீசன் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வருகின்ற மார்ச் 26-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த 15வது ஐபிஎல் தொடரில் லக்னோ மற்றும் குஜராத் அணிகள் புதிதாக இடம்பெற்றுள்ளன.

 

10 அணிகள் இந்த ஐபிஎல் சீசனில் பங்கேற்பதால், மொத்த ஆட்டங்களின் எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. நடப்பாண்டு ஐபிஎல் 15-வது சீசனின் முதல் போட்டி மார்ச் 26ஆம் தேதி தொடங்கி, மே 29 தேதி வரை நடைபெறும் என ஐபிஎல் தலைவர் ப்ரிஜேஷ் படெல் அறிவித்துள்ளார்.

இந்த முறை ஐபிஎல் தொடரில் உள்ள அணிகளை இரண்டு குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அதன்படி, Group A-வில் மும்பை, கொல்கத்தா, ராஜஸ்தான், டெல்லி, லக்னோ அணிகளும், Group B-யில் சென்னை, ஹைதராபாத், பெங்களூர், பஞ்சாப், குஜராத் அணிகளும் இடம்பெற்றுள்ளன. ஒரு குரூப்பில் இருக்கும் ஒவ்வொரு அணியும், எதிர் குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 1 முறை விளையாடும். 1 அணி உடன் மட்டும் இரண்டு முறை விளையாயிடும். அதேபோல், அதே குரூப்பில் உள்ள 4 அணிகளுடன் 2 முறை விளையாடும்.

இந்த நிலையில் ஒவ்வொரு அணியும் தங்களது கேப்டன் மற்றும் ஜெர்சிகளை அறிமுகம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் முன்னாள் சிஎஸ்கே வீரரான மிஸ்டர் ஐபிஎல் என்று அழைக்கப்படும் சுரேஷ் ரெய்னா ஐபிஎல் ஏலத்தில் எந்த அணியிலும் எடுக்கப்படவில்லை. இதனால் இவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்த நிலையில், தற்போது இவர் ஸ்டார்ஸ்போர்ட்ஸ் ஹிந்தி வர்ணனையாளராக பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது இந்த தகவல் ரெய்னா ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply