வயது மோசடி புகாரில் சிக்கிய சிஎஸ்கே வீரர்.. ஐபிஎல்லில் விளையாடுவது சிக்கல்.!

ஜூனியர் உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம் பெற்றவர் ஆல்ரவுண்டர் ராஜ் வரதன் ஹேங்கர்கேகர்.

மும்பையை சேர்ந்த ராஜ் வரதன் ஹேங்கர்கேகர் வயது மோசடியில் ஈடுபட்டுள்ளதாக மராட்டிய மாநிலம் விளையாட்டு மற்றும் இளைஞர் துறை ஆணையர் ஓம் பிரகாஷ் பகோரியா குற்றம்சாட்டியுள்ளார்.

ராஜ் வரதன் ஹேங்கர்கேகர் எட்டாம் வகுப்பில் மீண்டும் சேர்ந்தபோது பிறந்த தேதியை ஜனவரி 10, 2001-க்கு பதிலாக நவம்பர் 10, 2002 என்று மாற்றியுள்ளார்.

இந்த வயது குறைப்பால் தான் அவரால் ஜூனியர் உலக கோப்பை போட்டியில் விளையாட முடிந்ததாக ஓம் பிரகாஷ் பகோரியா புகார் அளித்துள்ளார்.

ராஜ் வரதன் சமீபத்தில் ஐபிஎல் ஏலத்தில் 1.5 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ஏலம் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னதாக காஷ்மீரை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ரஷீக் சலாம் தர் வயது மோசடி புகாரில் சிக்கினார். அவர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவர் இரண்டு வருட கிரிக்கெட் விளையாட பிசிசிஐயால் தடை விதிக்கப்பட்டது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply