வெடித்துள்ள சர்ச்சை. சிக்கலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!!

ஐபிஎல் ஏலம் நடந்து முடிந்துள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சிஎஸ்கேவுக்கு எதிராக தமிழ் அமைப்புகள் போர்க்கொடி தூக்கியுள்ளன.

நடப்பாண்டு ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் பிப்ரவரி 12, 13 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடந்து முடிந்துள்ளது. இதில் சென்னை அணி 87.5 கோடி ரூபாய் செலவு செய்து 25 வீரர்களை தேர்வு செய்துள்ளது.

இதில் நட்சத்திர வீரர்கள் ரெய்னா, டுபிளஸியை எடுக்கவில்லை என்பதால் அந்த அணி மீது ரசிகர்கள் கடும் அதிருப்தியில் இருந்தனர். இதனிடையே சமூக வலைத்தளமான ட்விட்டரில் #Boycott_ChennaiSuperKings என்ற ஹேஸ்டேக் வைரலாகி வருகிறது.

இதனை ரெய்னா, டுபிளஸி ரசிகர்கள் செய்கிறார்கள் என்று கூறப்பட்ட நிலையில் இதன் பின்னால் தமிழ் அமைப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு காரணம் மகீஷ் தீக்சணா என்ற இலங்கை சுழற்பந்துவீச்சாளரை ஏலத்தில் சென்னை அணி தேர்வு செய்தது தான்.

தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கை நாட்டை சேர்ந்த வீரருக்கு ஏன் வாய்ப்பு வழங்குகிறீர்கள் என்று கூறி தமிழ் அமைப்புகள் இந்த எதிர்ப்பை தெரிவித்து வருகின்றன.

தீக்சனாவை அணியிலிருந்து நீக்கவில்லை என்றால் சென்னை அணிக்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்போம் தமிழகத்தில் போட்டியை நடத்த விட மாட்டோம் என்ற தமிழ் அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தமிழ் அமைப்புகளின் இந்த எச்சரிக்கையால் சிஎஸ்கே அணி நிர்வாகம் கடந்த சில ஆண்டுகளாக இலங்கை வீரர்களை தேர்வு செய்யாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply