வேலூர்: விலை குறைவு காரணமாக தக்காளி சாலையோரம் கொட்டப்படுகிறது.

வேலூரில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தக்காளி விலை அதிகமாக இருந்தது. இதனால் பொதுமக்கள் வேதனை அடைந்தனர். தற்போது தக்காளி விலை குறைந்துள்ளது. வேலூர் நேதாஜி மார்க்கெட்டுக்கு ஆந்திரா மற்றும் வேலூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விளைவிக்கப்படும் காய்கறிகள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகிறது. நேதாஜி மார்க்கெட்டில் 25 கிலோ கொண்ட தக்காளி பெட்டி ரூ.300-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ 12 ரூபாய் என்ற அளவில் மொத்த விற்பனைக்கு கொள்முதல் செய்யப்படுகிறது.

சில்லரை விற்பனையாக ரூ.15 லிருந்து ரூ.20 வரை கடைகளில் விற்பனை செய்கின்றனர். தக்காளி விலை குறைந்துள்ளதாலும், அதன் வரத்து அதிகமாக உள்ளதாலும் தக்காளிகள் விற்பனை ஆகாமல் அழுகி விடுகிறது. அதனை வியாபாரிகள் சாலையோரம் கொட்டும் நிலை ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply