டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியானது.. மீண்டும் மோதும் இந்தியா – பாகிஸ்தான் – முழு அட்டவணை!

2022ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அட்டவணை மற்றும் தேதிகளை ஐசிசி அறிவித்துள்ளது.

 

மிகவும் பரபரப்பாக நடைபெற்ற 2021ம் ஆண்டு டி20 உலகக்கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா கோப்பையை தட்டிச்சென்றது.

இந்நிலையில் அடுத்த டி20 உலகக்கோப்பைகான அறிவிப்பை ஐசிசி வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தாண்டு அக்டோபர் மாதத்திலேயே ரசிகர்களுக்கு திருவிழா காத்துள்ளது.

உலகக்கோப்பை தொடர்
 2022ம் ஆண்டுகான டி20 உலகக்கோப்பை தொடர் வரும் அக்டோபர் 16ம் தேதி முதல் கோலகலமாக தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13ம் தேதி நடைபெறவுள்ளது. மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் இந்த தொடரில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. இந்த முறை இந்த தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் நடத்தப்படவுள்ளன.

எந்தெந்த மைதானங்கள்

இதற்காக அடிலெய்ட், பிரிஸ்பேன், கீலாங், ஹோபார்ட், மெல்பேர்ன், பெர்த், சிட்னி, ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அரையிறுதி போட்டி சிட்னி, அடிலெய்ட், ஓவல் மைதானங்களில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

தகுதிச்சுற்று அணிகள்

இந்த முறை நமிபியா, ஸ்காட்லாந்து, இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றி பெற்று வரவேண்டிய சூழலில் உள்ளன. ஆஃப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து, இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா ஆகிய மற்ற அணிகள் சூப்பர் 12 சுற்றுக்கு நேரடியாக தகுதி பெற்றுள்ளன.

மீண்டும் இந்திய – பாகிஸ்தான்

அக்டோபர் 22ம் தேதி முதல் தொடங்கும் சூப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதவுள்ளன. வரும் அக்டோபர் 23ம் தேதியன்று இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மெல்பேர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ளது. கடந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை தான் எதிர்கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி ஆட்டங்கள்

  • அக்டோபர் 23: இந்தியா vs பாகிஸ்தான்
  • அக்டோபர் 27: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி
  • அக்டோபர் 30: இந்தியா vs தென்னாப்பிரிக்கா
  • நவம்பர் 2: இந்தியா vs வங்கதேசம்
  • நவம்பர் 6: இந்தியா vs க்ரூப் சுற்றில் தேர்வான அணி

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply