தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.58 ஆயிரம் ஊதியத்தில் தமிழக அரசு வேலைக்கு விண்ணப்பங்கள் வரவற்பு

தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை (TNHRCE) ஆனது நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயிலில் காலியாக உள்ள உதவி சுயம்பாகம்‌, இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் முதல் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

மேலாண்மை : தமிழக அரசு

துறை : இந்து அறக்கட்டளைத் துறை (TNHRCE)

பணியிடம் : நாமக்கல் மாவட்ட அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில்

மொத்த காலிப் பணியிடங்கள் : 05

பணி மற்றும் காலிப் பணியிடங்கள் :

 • உதவி சுயம்பாகம்‌ – 02
 • இளநிலை உதவியாளர் – 01
 • தட்டச்சர் – 01
 • டிக்கெட் பஞ்சர் – 01

கல்வித் தகுதி :

உதவி சுயம்பாகம், டிக்கெட்‌ பஞ்சர்‌

 • தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
 • மேலும், நைவேத்யம்‌ மற்றும்‌ பிரசாதம்‌ தயாரிக்க தெரிந்திருக்க வேண்டும்‌.

இளநிலை உதவியாளர்

 • 10-ம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர்

 • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்று தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு உயர்நிலை மற்றும் கீழ்நிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
 • மேலும், Computer Application மற்றும் Office Automation அல்லது அதற்கு இணையான சான்றிதழ்‌ பெற்றிருக்க வேண்டும்‌.

வயது வரம்பு மற்றும் தகுதி :

 • விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
 • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
 • மேலும், விண்ணப்பதாரர் இந்து மதத்தைச் சார்ந்தவராக இருக்க வேண்டும்.

ஊதியம் :

 • உதவி சுயம்பாகம் – ரூ.10,000 முதல் ரூ.31,500 மாதம்
 • இளநிலை உதவியாளர், தட்டச்சர் – ரூ.18,500 முதல் ரூ.58,600 மாதம்
 • டிக்கெட்‌ பஞ்சர்‌ – ரூ.11,600 முதல் ரூ.36,800 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மேற்குறிப்பிட்ட கோவிலில் அலுவலக வேலை நாட்கள் அல்லது https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in எனும் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பப் படிவம் பெற்று பூர்த்தி செய்து 21.01.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

உதவி ஆணையர்/ செயல் அலுவலர், அருள்மிகு நரசிம்மசுவாமி திருக்கோயில் அலுவலகம், ஆஞ்சநேயர் திருக்கோயில் வளாகம், நாமக்கல் – 637001

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://namakkalanjaneyar.hrce.tn.gov.in மற்றும் www.hrce.tn.gov.in அல்லது மேலே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பினைக் காணவும்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply