ரூ.60,000 சம்பளத்தில் அங்கன்வாடியில் கொட்டிக்கிடக்கும் வேலைவாய்ப்புகள்: யாரெல்லாம் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்..?

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி துறையில் ஒப்பந்தகால அடிப்படையில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியானவர்களிடம் இருந்து வரும் 24 ஆம் தேதிக்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளம்பர எண்.01/2021

நிறுவனம்: ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் துறை

மொத்த காலியிடங்கள்: 95

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
பணி: Financial Management- Specialist – 01
சம்பளம்: மாதம் ரூ.60,000

பணி: Accountant – 02
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: Project Associate – 01
சம்பளம்: மாதம் ரூ.25,000

பணி: Secretarial Assistant /Date Entry Operator – 01
சம்பளம்: மாதம் ரூ.15,000

பணி : District co-ordinators (1 per District) – 05
சம்பளம்: மாதம் ரூ.30,000

பணி: District Project Assistants – 05
சம்பளம்: மாதம் ரூ.18,000

பணி: Block Co-ordinators (1 per Block) – 28
சம்பளம்: மாதம் ரூ.20,000

பணி: Block Project Assistants – 52
சம்பளம்: மாதம் ரூ.15,000

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை: கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு பதிவு அல்லது விரைவு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: Director cum Mission Director, Department of Integrated Child Development Services, No.1, Dr.M.G.R Salai, Taramani, Chennai – 600 113.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 24.12.2021

மேலும் விவரங்கள் அறிய www.icds.tn.gov.in அல்லது https://www.icds.tn.gov.in/icdstn/pdf/Notification.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply