அட கொடுமையே… பணத்திற்காக தங்கையை திருமணம் செய்துகொண்ட அண்ணன்.! மாநிலத்தையே அதிரவைத்த சம்பவம்.!

இந்தியாவில் அரசாங்க சலுகையை பெறுவதற்காக சொந்த சகோதரியை திருமணம் செய்து கொண்ட சகோதரனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலத்தின் துண்டலா என்ற இடத்தை சேர்ந்த இருவருக்கும் தான் திருமணம் நடந்துள்ளது. அங்கு சமூக நலத்துறை சார்பில் ஏழை, எளியோருக்கு அம்மாநில அரசு திருமணம் செய்து வைக்கும் திட்டம் முக்யமந்திரி சாமுஹிக் விவாஹ் யோஜனா திட்டம் ( Mukhyamantri Samuhik Vivaah Yojana scheme) அமலில் உள்ளது.

இந்த திட்டத்தின் கீழ் திருமணம் செய்து கொள்ளும் தம்பதிக்கு 35 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதில் 20 ஆயிரம் ரூபாய் மணப்பெண்ணின் வங்கிக் கணக்கில் அரசு நேரடியாக செலுத்திவிடும். பின்னர் மணப்பெண் வங்கி கணக்கில் ரூ 20,000 பணம் மற்றும் ரூ 10,000 மதிப்புள்ள பரிசு பொருட்கள் வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் கீழ் சமீபத்தில் 51 தம்பதிகளுக்கு திருமணம் நடந்தது, இதில் குடும்பத்தார், நண்பர்கள் என பலரும் கூட்டமாக கலந்து கொண்டனர். அதில் திருமணம் செய்து கொண்ட ஒரு தம்பதி உண்மையில் அண்ணன் – தங்கை எனவும் பணத்துக்காக அந்த ஆண் இந்த செயலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

இதில் சம்மந்தப்பட்ட அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ள அதிகாரிகள், மணமகன் மீது வழக்குப்பதிவு செய்து அவரின் ஆதார் கார்டை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply