யோகிபாபுவுக்கு அந்த நடிகை ஜோடியா? – வயித்தெரிச்சலில் சக நடிகர்கள்.

பல வருடங்களாக போராட்டி ஒருவழியாக முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்திருப்பவர் நடிகர் யோகிபாபு.

யோகி படத்தில் நடித்ததால் அவருக்கு இந்த பெயர்.

விஜய், அஜித், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் 2ம் கட்ட நடிகர்கள் திரைப்படத்திலும் யோகிபாபுதான் நடித்து வருகிறார். ஒரு நாளைக்கு ரூ.10 லட்சம் அவரின் சம்பளம் உயர்ந்துள்ளது. காமெடியானாக நடித்தாலும், தர்மபிரபு, கூர்கா போன்ற காமெடி கதைகளிலும், மண்டேலா போன்ற நல்ல கதையம்சம் கொண்ட திரைப்படங்களிலும் ஹீரோவாக நடித்து வருகிறார்.

இந்நிலையில், நடிகை லட்சுமி மேனனுக்கு ஜோடியாக ஒரு புதிய படத்தில் அவர் நடிக்கவுள்ளார். இப்படத்தை புதுமுக இயக்குனர் முருகேஷ் பூபதி இயக்கியுள்ளார். இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 lakshmi menon

கும்கி திரைப்படத்தில் அறிமுகமானவர் லட்சுமி மேனன். முதல் படமே மாஸ் ஹிட். தொடர்ந்து விஷாலுடன் பல படங்களில் நடித்தார். அவரை விஷால் திருமணம் செய்து கொள்ளவும் விரும்பினார். ஆனால், என்ன காரணத்தினாலோ அந்த காதல் பிரேக்கப் ஆனது. ஒருபக்கம் உடல் எடை கூடி வேறு தோற்றத்திற்கு மாறினார் எனவே, பட வாய்ப்புகளை இழந்தார். தற்போது உடல் எடையை குறைத்து மீண்டும் பழைய அழகுக்கு திரும்பியுள்ளார்.

பெரிய நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்தவர் தற்போது யோகிபாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply