கொரோனா தடுப்பூசி; முன்பதிவு செய்ய வாட்ஸ் அப் எண் அறிமுகம்- மத்திய சுகாதாரத்துறை மந்திரி தகவல்

கொரானா தடுப்பூசி செலுத்திக் கொள்ளபவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா அறிவித்துள்ளார். இதற்கான வாட்ஸ் ஆப் எண்ணையும் வெளியிட்டுள்ளார். கொரோனா 3-வது அலை அக்டோபரில் உச்சம்  அடையும் என மத்திய அரசுக்கு தேசிய பேரிடர் மேலாண்மை நிர்வாகம் நேற்று அறிக்கை சமர்பித்தது.
இதனால், கொரோனா  தடுப்பூசி செலுத்துவதை வேகப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. இதன்படி கூடுதல் அம்சமாக கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளபவர்கள் வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்து கொள்ளும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா இதுதொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில்  வெளியிட்ட பதிவில், “” கொரோனா தடுப்பூசி இடங்களை இப்போது வாட்ஸ்அப் மூலம் முன்பதிவு செய்யலாம். http://wa.me/919013151515 மூலம் MyGovIndia கொரோனா ஹெல்ப் டெஸ்கிற்கு வாட்ஸ்அப்பில் அனுப்புவதன் மூலம் தங்களுக்கு முன்பதிவு செய்யலாம்” எனக் கூறியுள்ளார்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply