10வது படித்த 20,000 பேருக்கு அமேசானில் வேலை வாய்ப்பு! 

ஹைதராபாத்:

வாடிக்கையாளர் சேவை (கஸ்டமர் சர்வீஸ்) பிரிவில் கிட்டத்தட்ட 20,000 பேருக்கு தற்காலிகமாக ( பருவகால) வேலைவாய்ப்பை வழங்குவதாக அமேசான் இந்தியா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இந்தியாவிலும் உலகெங்கிலும் உள்ள வாடிக்கையாளர்களுக்கு தடையற்ற ஆன்லைன் ஷாப்பிங் அனுபவத்துடன் உதவ ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்று அமேசான் நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

புதிய வேலை வாய்ப்புகள் ஹைதராபாத், புனே, கோயம்புத்தூர், நொய்டா, கொல்கத்தா, ஜெய்ப்பூர், சண்டிகர், மங்களூரு, இந்தூர், போபால் மற்றும் லக்னோ ஆகிய இடங்களில் உள்ளன.

வாடிக்கையாளர் சேவை
அமேசானின் ‘மெய்நிகர் வாடிக்கையாளர் சேவை’ திட்டத்தின் ஒரு பகுதியாக பெரும்பாலான பதவிகள் உள்ளன. இந்த வீட்டிலிருந்தே இந்த வேலைகளை செய்ய முடியும் வழங்குகிறது. இந்த வேலை என்னவென்றால், மின்னஞ்சல், சாட்டிங், சமூக ஊடகங்கள் மற்றும் தொலைபேசி ஆகியவற்றின் மூலம் வாடிக்கையாளரிடம் பேச வேண்டும்

என்ன தகுதி
வாடிக்கையாளர் சேவை அதிகாரி பணிக்கான தகுதி என்று பார்த்தால் குறைந்த பட்சம் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு அல்லது கன்னடம் ஆகிய ஏதேனும் ஒரு மொழிகளில் புலமை உள்ளவராக இருக்க வேண்டும்.

ஒரு சதவீதம் பேர்
வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் கவனத்துக்கு: செயல்திறன் மற்றும் வணிகத் தேவைகளின் அடிப்படையில், தற்போதைய தற்காலிக பதவிகளில் ஒரு சதவீதம் இந்த ஆண்டின் இறுதியில் நிரந்தர பதவிகளாக மாற்றப்பட வாய்ப்புள்ளது என்று அமேசான் இந்தியா தெரிவித்துள்ளது.

விடுமுறை காலம்
அமேசான் இந்தியா இயக்குனர் (வாடிக்கையாளர் சேவை) அக்‌ஷய் பிரபு கூறுகையில், “வளர்ந்து வரும் வாடிக்கையாளர் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக வாடிக்கையாளர் சேவை அமைப்பு முழுவதும் பணியமர்த்தல் தேவைகளை நாங்கள் தொடர்ந்து மதிப்பீடு செய்கிறோம். இந்திய மற்றும் உலகளாவிய விடுமுறை காலங்கள் தொடங்குவதால் அடுத்த ஆறு மாதங்களில் வாடிக்கையாளர் போக்குவரத்து மேலும் அதிகரிக்கும் என்று நாங்கள் மதிப்பிடுகிறோம்” என்றார்.

மேட் இன்இந்தியா
இதற்கிடையில், அமேசான் மற்றும் பிற ஆன்லைன் சில்லறை விற்பனையாளர்கள், மத்திய அரசு கேட்டபடி சமீபத்திய லேபிளிங் விதிமுறைகளுக்கு இணங்க செயல்படுவதற்கு சில மாதங்கள் அவகாசம் வழங்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளன. அமேசான் ப்ளிப்கார்ட் உள்ளிட்ட ஈ-காமர்ஸ் நிறுவனங்களுக்கு அந்த பொருள் மேட் இந்தியா, அல்லது மேட் இன் சீனா உள்ளிட்ட எந்த நாட்டில் தயாரிக்கப்பட்ட பொருள் என்பதையும் லேபிளில் குறிப்பிடுமாறு கேட்டுள்ளது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு தயாரிக்கப்பட்ட தயாரிப்புக்கு இடையில் வாடிக்கையாளரைப் புரிந்துகொள்ள இந்த நடவடிக்கை உதவும். இந்தியா-சீனா எல்லை மோதலை அடுத்து சீன பொருட்களை புறக்கணிக்க அழைப்பு விடுத்துள்ள நிலையில், பொருட்களை லேபிளிட வேண்டும் எனறு மத்திய அரசு அறிவித்துள்ளது.

அமேசான் வேலைக்கு விண்ணப்பம்
அமேசான் தளத்தில் 20000 பேருக்கு வேலை இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது என்பது குறித்த தகவலும் இடம் பெற்றுள்ளது. 10ம் வகுப்பு படித்தால் கூட விண்ணப்பிக்கலாம். மேலும் என்னென்ன தகுதி வேண்டும் என்பதையும், விண்ணப்பிப்பதற்கான செயல்முறைகள் குறித்து தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.amazon.jobs/en/jobs/SF200033361/virtual-customer-service-associate-hyderabad-india என்ற லிங்கில் வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இதுகுறிய கால வேலைதான். பணித்திறனை பொறுத்து நிரந்தரமாக்கப்படுவார்கள் என அமேசான் தெரிவித்துள்ளது.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply