வேலைவாய்ப்பை புதுப்பிக்க தவறியவருக்கு அறிய வாய்ப்பு.. கிளிக் பண்ணுங்க., அப்ளை பண்ணுங்க.!

வேலை வாய்ப்பு அலுவலகங்களில் புதுப்பிக்க ஆகஸ்ட் 27 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 2017, 2018, 2019 ஆகிய ஆண்டுகளில் வேலை வாய்ப்பு அலுவலக பதிவினை புதுப்பிக்க தவறியவர்களுக்கு அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இணையவழியில் அல்லது வேலைவாய்ப்பு அலுவலகங்களுக்கு பதிவு அஞ்சல் வழியாக தகவல் அனுப்பி தங்களின் விபரங்களை புதுப்பித்து வைத்துக்கொள்ளலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது. பதிவுதாரர்கள் https://tnvelaivaaipu.gov.in/ என்ற இணையத்திலும் பதிவு செய்துகொள்ளலாம்.

ஆகஸ்ட் மாதம் 27 ஆம் தேதி வரை இணையவழியில் அல்லது பதிவு அஞ்சலில் வேலைவாய்ப்பு தொடர்பான தகவலை பதிவு செய்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனை அனைவரும் உபயோகம் செய்துகொள்ளலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply