சென்னை லலிதா ஜுவல்லரியில் 5 கிலோ தங்கம் திருட்டு

சென்னையில் பிரபல நகைக்கடையான லலிதா ஜுவல்லரியில் இருந்து 5 கிலோ தங்க நகைகளை காணவில்லை என புகார் எழுந்துள்ளது.

தேனாம்பேட்டையில் உள்ள லலிதா ஜுவல்லரியில் நகை அளவீடு செய்யும் பணியின்போது, 5 கிலோ தங்க நகை குறைந்திருந்தது தெரியவந்தது. இதனையடுத்து ஜுவல்லரி கிளை மேலாளர் தேனாம்பேட்டை காவல்நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதன்படி ஜுவல்லரியில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தப்போது, அங்கு பணிபுரிந்து வந்த ராஜஸ்தானைச் சேர்ந்த பிரவின்குமார் சிங் என்பவர் நகைகளை திருடியது தெரியவந்தது. பாலீஸ் போடும் நகைகளை பீரோவில் வைக்காமல், அதன் அடியில் வைத்துவிட்டு பின்னர் சக பணியாளர்கள் இல்லாத நேரத்தில் அதனை எடுத்துச் சென்றது சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இதனிடையே அவர் தலைமறைவான நிலையில் காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply