மூன்றாம் பாலினத்தவர்களுக்காக ரயில் நிலையம் அர்பணிப்பு

டெல்லி அருகே உள்ள நொய்டா மெட்ரோ ரயில் நிலையத்தை 3 ம் பாலினத்தவருக்கு அர்ப்பணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள நொய்டோ மெட்ரோ ரயில் நிர்வாக இயக்குனர் ரிது மகேஸ்வரி ,

மூன்றாம் பாலினத்தவரைப் பிரதி நிதித்துவப்படுத்தும் வகையில் தனி நபர்கள் மற்றும் தொண்டு நிறுவனங்களிடமிருந்து பல பரிந்துரைகள் பெறப்பட்டதாக தெரிவித்தார். அதன் அடிப்படையில் நொய்டா ரயில் நிலையம் 3 ம் பாலித்தனவர்களுக்காக அர்ப்பணிக்கப்படுவதாகவும் ,

அதற்காக ரயில் நிலையத்தின் பெயர் ரெயின்போ என மாற்றம் செய்யப்படும் என்றும் ரிது மகேஸ்வரி தெரிவித்துள்ளார். மேலும் திருநங்கைகளுக்கு அதிகாரம் அளிக்கும் நோக்கத்துடன் இந்த திட்டம் செயல்படுத்தப்படுவதாக அவர் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்

செல்: +919884295406 இணையம் : www.naalayathalaimurai.com

Leave a Reply